ஆப்பம் காலை உணவுக்கு ஏற்ற ஒரு எளிதான மற்றும் சுவையான உணவு. ஒரு மாறுதலுக்காக இந்த சத்தான கருப்பட்டி ஆப்பம் செய்து பாருங்கள். சூடான ஆப்பத்தின் மீது தேங்காய்பால் விட்டு ஊற வைத்து ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டாலே கரைந்து விடும். இந்த இனிப்பு ஆப்பம் நடுவில் ஸ்பான்ச் போன்று மெத்தென்றும் , ஓரங்களில் மொரு மொருவேன்றும் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்...
அத்துடன் அரை கப் அவளை களைந்து சேர்த்து மிக்சி அல்லது கிரைண்டரில் நைசாக , கெட்டியாக அரிது கொள்ளவும்.
மாவு நன்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
மாவை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
1 கப் பொடித்த கருப்பட்டியில் 1 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தூசி இருந்தால் வடிகட்டி கொதிக்க விடவும்.
தேன் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும்.
ஆறியவுடன் மாவில் சேர்த்து சிறிது நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
ஆப்பச்சட்டியை அடுப்பில் வைத்து சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை ஊற்றி சுழற்றவும்.
மேலும் சில துளிகள் நெய் விட்டு மூடி விடவும்.
இரண்டு அல்லது மூன்று நிமிடம் கழித்து எடுத்து சூடாக தேங்காய் பாலுடன் பரிமாறவும்.
செய்முறை:
1 கப் பச்சரிசி, 1 கப் இட்லி அரிசி, 2 மேஜை கரண்டி உளுத்தம் பருப்பு, 1 தேக்கரண்டி வெந்தயம் நான்கையும் கழுவி சுத்தமான நீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.அத்துடன் அரை கப் அவளை களைந்து சேர்த்து மிக்சி அல்லது கிரைண்டரில் நைசாக , கெட்டியாக அரிது கொள்ளவும்.