பொரிச்சகுழம்பு புளி இல்லாமல் , மிளகு, ஜீரகம் சேர்த்து செய்யப்படும் குழம்பு வகை. புடலங்காய் , அவரைக்காய், முருங்கைக்காய் போன்ற காய்களில் செய்தால் மிக ருசியாக இருக்கும். இந்த குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள புளிப்பாக நெல்லிக்காய் தயிர் பச்சடி அல்லது புளியிட்ட கீரை செய்வது வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு இந்த குழம்பையும் சேர்த்து சாபிட்டால் அமிர்தமாக இருக்கும்....
தேங்காய் தவிர மற்ற பொருட்களை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து , தேங்காயுடன் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
காய் நன்கு வெந்தவுடன், சாம்பார் பொடி, பெருங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் வெந்த பருப்பை சிறிது தண்ணீர் விட்டு கலக்கி ஊற்றவும்.
கடைசியாக, அரைத்த விழுதை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, உள்ளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
தேவையான பொருட்கள் :
- முருங்கைக்காய் 4
- குக்கரில் குழைய வெந்த துவரம் பருப்பு 3 மேஜை கரண்டி (தேவைஎன்றால் பருப்புடன் 2 தக்காளி துண்டுகளை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்)
- கறிவேப்பிலை
- மஞ்சள் பொடி சிறிதளவு
- சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
- உப்பு தேவையான அளவு
- பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
- தேங்காய் துருவல் 3 மேஜை கரண்டி
- உளுத்தம் பருப்பு 3 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல் 3
- ஜீரகம் 1 தேக்கரண்டி
- மிளகு 1 தேக்கரண்டி
- பச்சரிசி 1 தேக்கரண்டி
- எண்ணெய் 2 தேக்கரண்டி
தேங்காய் தவிர மற்ற பொருட்களை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து , தேங்காயுடன் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகளை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.காய் நன்கு வெந்தவுடன், சாம்பார் பொடி, பெருங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.