நாம் எப்பொழுது அரிசியில் செய்யும் அடையை விட இந்த வரகு திணை அடை மொறு மொறுவென்று சுவையாக இருக்கும். நம் தினசரி உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள இது போன்ற சிற்றுண்டிகள் வழிவகுக்கின்றன.
- ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்
- சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்
- பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
- வரகரிசி 1 கப்
- திணை 1 கப்
- உளுத்தம் பருப்பு 1/4 கப்
- கடலை பருப்பு 1/4 கப்
- துவரம் பருப்பு 1/2 கப்
- மிளகாய் வற்றல் 3
- இஞ்சி சிறு துண்டு
- சின்ன வெங்காயம் 5
- கருவேப்பிலை சிறிது
- உப்பு தேவையான அளவு
செய்முறை;
வரகரிசி, திணை மற்றும் பருப்பு வகைகளை நன்கு களைந்து நீரில் நான்கு மணி நேரம் மிளகாய் வற்றலுடன் ஊற வைக்கவும்.பின் அத்துடன் இஞ்சி, வெங்காயம், உப்பு சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
மாவில் கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து மெல்லிய அடைகளாக ஊற்றி இரு புறமும் நல்லெண்ணெய் விட்டு மொறு மொறுவென்று ஆனவுடன் எடுத்து அவியல் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.
This comment has been removed by the author.
ReplyDelete